அமைச்சுக்கள் நியமனம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice அமைச்சுக்கள் நியமனம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

அமைச்சுக்கள் நியமனம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் என்பன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் முழு நிர்வாகத்தையும் படையினரிடம் தாரை வார்ப்பதற்கு ஒப்பானது எனவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடு இராணுவ மயப்படுத்தப்படுகின்றது என தேர்தல் காலத்தில் நாம் கூறியபோது அரசும் அரசுடன் சேர்ந்துள்ள கட்சிகளும் அதனை மறுத்தனர் . ஆனால் இன்று நாட்டின் சிவில் நிர்வாத்தை மேற்கொள்ளும் அமைச்சான உள்நாட்டு அலுவல்கள் விடயம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்படுவது மிக மோசமான நிலமையை ஏற்படுத்துவதோடு சகல நிர்வாக அதிகாரிகளையும் படையினர் மூலம் கட்டுப்படுத்தும் நிலமையே ஏற்படும்.

ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகளும் தொடர்பை பேன விரும்புவார்கள் அந்த நிலமையினையும் கேள்விக்கி உட்படுத்துவதாகவும் மாவட்டச் செயலகங்கள் பிரதேச செயலகங்களிற்குகூட மக்கள் சென்று தமது நிலமையை தெரிவிக்க அஞ்சும் நிலையினையே புதிய அரசு தோற்றுவிக்கின்றது. இதை சர்வதேச நாடுகளும் அறிந்துகொள்ள வேண்டும்.

இதேநேரம் வடக்கு கிரக்கு பகுதிகளில் தமிழ் மக்களி்ன் வாக்குகளைப் பெற்ற அரச ஆதரவுக் கட்சிகளும் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும். அத்தோடு இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் நிர்வாகத்தை ஒப்படைக்கும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் இந்த விடயத்திற்கும் கூட்டுப் பொறுப்பினை ஏற்க வேண்டும். இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் நலன் சார்ந்து உரிய தரப்புக்களின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்ல்படும். என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post