நல்லூரான் தீர்த்தத் திருவிழாவில் திருடிய பெண் - சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார் - Yarl Voice நல்லூரான் தீர்த்தத் திருவிழாவில் திருடிய பெண் - சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார் - Yarl Voice

நல்லூரான் தீர்த்தத் திருவிழாவில் திருடிய பெண் - சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆயல தீர்த்தத் திருவிழாவிலும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் ஆலயத் தேர்த் திருவிழாவான நேற்றும் தாலிக் கொடி மற்றும் தங்கச் சங்கிலி என்பன திருடப்பட்டுள்ளது.

 இத் திருட்டுக் குற்றச்சாட்டில் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தீர்த்தத் திருவிழாவான இன்றும் பெண்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத் திருட்டுச் சந்தேகத்தில் பெண் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post