யாழில் கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - Yarl Voice யாழில் கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - Yarl Voice

யாழில் கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் 27 நாட்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எரிகாயங்களுடன்கடந்த 4ஆம் திகதி அல்வாய் வடக்கைச் சேர்ந்த ரூபிகா (வயது-22) என்ற இளம் குடும்பப் பெண் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தீ மூட்டினார் என்று விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால்மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இளம் குடும்பப் பெண்ணில் சடலம் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post