கூட்டமைப்பை அழிக்க எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள் - தமிழ் மக்களிடம் சுமந்திரன் கோரிக்கை - Yarl Voice கூட்டமைப்பை அழிக்க எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள் - தமிழ் மக்களிடம் சுமந்திரன் கோரிக்கை - Yarl Voice

கூட்டமைப்பை அழிக்க எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள் - தமிழ் மக்களிடம் சுமந்திரன் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இறுதி நாள் பரப்புரைக் கூட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலம் தெரிவித்ததாவது..

இந்த தேர்தல் களம் ஆரம்பமான காலத்திலிருந்தே சில பொய்ப் பிரச்சாரங்கள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை நண்பன் சிறிதரன் இங்கு பேசும் போது கூட சொல்லியிருந்தார். இந்த பொய்ப் பிரச்சாரங்களை சில ஊடகங்கள் தொடரந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சில ஊடகங்கள் சிலரை விலைக்கு வாங்கி அவர்கள் மூலமாகவும் அந்தப் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். 

துரதிஸ்ரவசமாக எங்கள் அணிக்குள்ளே இருந்த சிலரை விலைக்கு வாங்கி அப்படியான பொய்ப்பிரச்சாரங்கள் நடைபெறுகிறது. இன்றைக்கு இரவோடு இந்த தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த பிறகு நாளை அல்லது நாளை மறுதினம் என்னவிதமான பொய்ப் பிரச்சாரங்களை அவர்கள் அவிழ்த்து விடுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் மக்களை எச்சரிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. 

ஏனென்றால் இதிலே முன்னின்று செயற்படுவது லண்டனை தளமாகக் கொண்டு இயங்ககின்ற ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடகம். இலண்டனை தளமாகக் கொண்டுட இயங்குகின்ற காரணத்தினாலே தேர்தல் ஆணைக்குழு கொடுத்திருக்கிற கட்டுப்பாடுகள் அவர்களைக் கட்டுப்படுத்தாது. நாளைக்கும் நாளை மறுதினமும் பல பொய்யான வதந்திகள் குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படும் என்று நான் நம்புகின்றேன். அது என்னவென்று தெரியாது. ஆனால் இந்த விசமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களுக்கு நிங்கள் செவி கொடுக்கக் கூடாது. 

ஏற்கனவே இந்த எச்சரிக்கை உங்களுக்கு கொடுக்கப்படுவதற்கான காரணம் என்னவெனில் நாங்கள் அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாத இரண்டு நாட்கள் இருக்கிறது. ஆனால் இப்படியாக இந்த கடைசி இரண்டு நாட்களிலும் இப்படி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்வதற்கான தயார் வேலைகள் எல்லாம் நடைபெற்றிருப்பது எங்களுக்குத் தெரியும். அது அந்த ஒரு ஊடகம் மட்டுமல்ல. குறிப்பாக பல பிரசுரங்கள் கூட விநியோகிக்கப்படலாம். இன்றைக்கும் அப்படியான சில பிரசுரங்கள் கூட விநியோகிகக்பட்டிருக்கின்றன. 

இந்தப் பிரசுரங்களை அச்சிடுவதற்கு வசதியுள்ள சிலர் ஏற்கனவே தங்களுடைய பிரசுரங்களை விநியோகித்திருக்கிறார்கள். அந்த வசதியை இன்னும் கூடுதலாக வருகிற இரண்டு நாட்களிலும் பாவிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இதைக் குறித்து அதிகம் விசனப்படவில்லை. 

ஏனென்றால் யார் நேர்மையாக மக்களுக்காக சேவை செய்திருக்கிறோம் என்று மக்களுக்குத் தெரியும். அதற்கான தீர்ப்பை நீங்கள் கெர்டுப்பீர்கள். ஆனால் எந்தத் துணிவிலே இப்படியான பொய்ப் பிரச்சாரங்களை கூச்சமின்றி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்குப் புரியாமல் இருக்கிறது. 

மக்களை முட்டாள்களாக்குகிற செயற்பாடுகள் பல நடந்து கொண்டே இருக்கின்றன. இங்கு சிறிதரன் போசும் போது சொன்னார் எங்கள் அணியில் இருக்கிற ஒரு பத்திரிகை தன்னுடைய செய்தியையும் என்னுடைய செய்தியையும் நாளைக்கு பிரசுரிக்காது என்று சொல்லியருந்தார். ஆம் அது பிரசுரிக்காது தான். அவ்வாறு பிரசுரிப்பதாக இருந்தால் ஏதாவது சேறுவாறி அள்ளி வீசித் தான் பிரசுரிக்கும். ஆகவே அவர்களையும் மக்கள் இணங்காண வேண்டும். 

இன்னொரு விடயத்தை உங்களுக்கு நான் சொல்லி வைக்க வேண்டும். கொழும்பு மாவட்டத்திலே நாங்கள் போட்டியடுவதா இல்லையா என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் நாங்கள் சிந்திப்பது உண்டு. அப்படியாக நாங்கள் சிந்திக்கிற பொழுது எனக்குத் தெரிந்தவரையில் இதற்கு முன் இரண்டு தடவைகள் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்திருந்தோம். அதே போன்று மூன்றாவது தடவையாக இம் முறையும் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்திருக்கிறோம்.

நாங்கள் கடந்த இரண்டு தடவைகளிலும் கொழும்பில் வாழுகின்ற தமிழ் மக்களை மனோகணேசனுக்கு ஆதரவாக வாக்களிக்கச் சொல்லி கேட்டிருக்கிறோம். இந்தத் தடவையும் அதற்கு மாறாக நாங்கள் செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மனோகணேசனை ஆதரிக்கும் படியாக நான் கேட்டுக் கொள்கிறேன். 

எங்களுடைய விடுதலைப் பயணத்திலே பல சிக்கலான கால கட்டங்கள் எழுந்ததுண்டு. விசேசமாக வெள்ளைவானிலே கடத்தப்படுவதும் ஆட்கள் காணாமலாக்கப்படுவதுமான ஒரு காலகட்டம் இருந்தது. அந்தக் கால கட்டத்திலே ரவிராஐ; மனோகணேசன் போன்றவர்கள் ஒரு ஆணைக்குழுவை அமைத்து கொழும்பிலே செயற்பட்டார்கள். அவர்களுடைய செயற்பாடுகள் காரணமாக பல நூறு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டார்கள். அந்த நன்றியை நாங்கள் மறத்தலாகாது.

இந்தக் கால கட்டத்திலே தான் ரவிராஐ; சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு மனோ கணேசனுடைய பாதுகாப்பு விலக்கப்பட்டது. அவர் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலை இருந்தது. ஆகையினால் அவருக்கு மீளப் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. 

நான் அப்போது அரசியலில் இருக்கவில்லை. இந்த வழக்கு சம்மந்தமாக அவர் என்னை வந்து சந்திப்பதற்கு கூட வீதியில் இறங்கி வர முடியாத காலகட்டம் இருந்தது. ஆதனால் சட்டத்தரணிகளுக்கான எல்லா மரபுகளையும் மீறி நான் தனியாக வாகனத்தை எடுத்துச் சென்று அவரைச் சந்தித்து அவருக்காக ஒரு வழக்குச் செய்தேன். ஏனென்றால் அவர் எங்களுடைய இளைஞர்களுக்காக மிகவும் துணிவோடு செயற்பட்ட ஒருவர். 

இந்தத் தேர்தலிலே இது மட்டுமல்ல வேறு பல பொய்யுரைகள் பல மோசமான செய்திகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மிக மிக மோசமான செய்திகள் வெளியிடப்படுவது நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வந்து ஒரு கதிரையில் அமர்த்தி அழகு பார்த்த முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களினாலே தான். அவர் தான் யார் என்பதை மறந்து யாழ்ப்பாணத்திலே தமிழ் மக்களுடைய வாக்குகளைச் சிதறடிப்பதற்காக தன்னுடைய சம்பந்தி கூட போட்டியிடுகிறார். அதாவது அவரது சம்பந்தியான வாசுதேவ நாணயக்காரவின் கட்சியும் யாழ்ப்பாணத்தில் மட்டும் போட்டியிடுகிறது. 

மேலும் அரசில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் கட்சி யாழ்ப்பாணத்தில் மட்டும் போட்டியிடுகிறது என்றால் சம்பந்திக்கு சம்பந்தி துணை. இரண்டு பேரும் இரண்டு கட்சியை வைத்து தமிழ் மக்களுடைய பலத்தை சிதறடிப்பதற்காக இங்கே போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் ராஐபக்சாக்களுடன் எங்களுக்கு டீல் ஒன்று இருப்பதாக விக்கினேஸ்வரன் சொல்லுகிறார். ஆக அவர் எப்படியான ஒரு மனிதன். நாங்கள் ஏமாந்தது பல தடவைகளாக இருந்தாலும் இவர் விடயத்தில் அதாவது இதைப் போல ஏமாந்தது வேறு எந்தத் தடவையும் கிடையாது.

கொடுத்த கையைக் கடிக்க மாட்டேன் என்றவர் இன்றைக்கு கடித்து கடித்துக் கொண்டு சொல்கிறார் கர்ணணைப் போல நான் செஞ்சோற்றுக் கடனாக இருக்க மாட்டேன் என்றும் அவர்களுக்கு எதிராகத் தான் நான் இருப்பேன் என்றும் கூறுகின்றார். செஞ்சோற்றுக் கடன் ஒன்று இருக்கிறதையாவது மனுசன் ஞாபகத்தில் வைத்திருக்கிறது.

தன்னுடைய பதவிக் காலம் முடிவடைகிற வரைக்கும் அதாவது பதவியின் கடைசி நாள் வரைக்கும் கூட்டமைப்பின் முதலமைச்சராகத் தான் அவர் இருந்தார். அந்தப் பதவி அந்தக் கதிரை அவருக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. அதுவரைக்கும் கூட்டமைப்பின் கொள்கை தான் என்னுடைய கொள்கை என்று சத்தியம் பண்ணிச் சொன்னார்.
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையை ஒழுகி தான் நான் நடக்கிறேன் என்றார். 

என்னுடைய கொள்கையும் அது என்றும் சொன்னார். அப்படிச் சொன்னவர் ஒர இரவிலே புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்தார். அவ்வாறு கட்சியை ஆரம்பித்ததாக ஒரு பெயரைச் சொன்னார். பிறகு வேறொரு பழைய அரசியல் கட்சியை எடுத்து அதற்கு லேபிளை பெயரை சின்னத்தை மாற்றி புலிக்கொடி எல்லாம் இறங்கிவிட்டது இனி பாண்டியமன்னனின் மின் கொடி தான் பறக்கப் போகின்றது என வாய் கூசாமல் சொல்லிக் கொண்டு திரிகிறார்.

ஆகவே நர்ன இங்கே கநல்லூரடியில் வைத்து தமிழ் மக்களிடத்தே கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது அவருடைய உருவத் தோற்றத்தைக் கண்டு யாரும் மயங்கி அவருக்கு வாக்களிக்காதீர்கள். அவர் யார் என்கின்ற உண்மை எங்கள் எல்லாருக்கும் தெரிந்ததாகவே இருக்கிறது.

குறிப்பாக இந்தியப் பிரதம மந்திரி நரேந்திரமோடி இலங்கைக்கு வந்த போது எத்தனையோ முக்கியமான கோரிக்கைகள் எல்லாத்தையும் நாங்கள் முன்வைத்தோம். அதில் பிரதானமாக அரசியல் தீர்வைப் பற்றியெல்லாம் நாங்கள் அவருடன் பேசினோம். ஆவர் இலங்கைப் பாரர்ளுனமற்த்திலே சமஷ்டியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லுற அளவிற்கு நாங்கள் நிலைமை கொண்டு வந்திருந்தோம். . 

வீட்டுத் திட்டம் காணாமலாக்கப்பட்டவர்கள். அரசியல் கைதிகளின் விடுதலை என பல விடயங்கள் சம்மந்தமாக நாங்கள் பேசினோம். மிக முக்கியமாக எங்களுடைய தீர்வைப் பற்றிய விடயத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்தும் அதில் இந்தியா கொடுத்த அழுத்தங்கள் பற்றியும் அவரோடு பேசினோம். அதனுடைய விளைவுகளை இன்றைக்கும் நாங்கள் பார்க்கிறோம். 

குறிப்பாக கோட்டாபாய ராஐபக்ச ஐனாபதிபதி ஆன உடனேயே அவர் தன்னுடைய வெளியுறுவுத்துறை அமைச்சரை அனுப்புகிறார். ஐனாதிபதியை டில்லிக்கு கூப்பிகிறார். அங்கே அவருக்குச் சொன்னதை வெளியே வந்தும் இதைத் தான் ஐனாதிபதிக்கும் சொல்லியிருப்பதாக கூறினார். அதாவது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தன்மானத்தோடும் சுயாதீனத்தோடும் சமத்துவத்தோடு அதிகாரப் பகிர்வோடும் வாழ வேண்டுமென்று அவரிடத்திலே சொல்லியிருப்பதாக கூறியிருந்தார். 

அந்தளவிற்கு எங்களுடைய நிலைப்பாடு இந்தியப் பிரதமரோடு இருக்கின்ற அதே வேளையில் இங்கே முதலமைச்சராக நாங்கள் கொண்டு வந்து இருத்தியவர் ஒரு வேண்டுதல் கடிதமொன்றைக் கொடுக்கிறார்.. அது குறித்து பிறகு தான் எங்ளுக்குத் தெரிய வருகிறது. அந்தக்கடிதத்திலே அவர் கேட்டுக் கொண்டது என்னவென்றால் எமது மக்களுக்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கத்தக்கதாக காமுகன் பிரேமானந்தாவினுடைய சீடர்கள் சிலர் இப்போதும் இந்தி சிறையில் இருப்பதாகவும் அவர்களை விடுவிக்க கோரி கடிதம் கொடுத்திருக்கின்றார். 

இன்றைக்கு தான் 1 இலட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் பெற்றேன் என்று பிதற்றிக் கொண்டு திரிகிறார். நாங்கள் கேட்டதற்கிணங்க அவர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தனர். இந்தியாவிறகு கொண்டு செல்லப்பட்ட 13 இளம் பெண்கள் வயது குறைந்த பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கி அதன் காரணமாக சிறையிலே அடைக்கப்பட்ட அவருடைய பிரோமானந்தம் சாமியாரும் இருந்தார். மூன்று நீதிமன்றங்கள் இந்தியாவில் உள்ளது. அடுத்தடுத்து மூன்று நீதிமன்றங்களை; அவiர்களைக் குற்றவாளிகாக அiடாயம்கண்டு அறிவித்தது. 

அவருக்கு இரண்டு வருட ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. இப்படிhக வன்முறை செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென்பது வடக்கு மாகாண பிரேமானந்தாவின் சீடருக்கு முக்கியமாகப்பட்டது. இதைப் பற்றி பல தடவைகள் அவரிடத்தே சபையின் அவைத் தலைவர் இங்கே மேடையில் இருக்கிற பொழுது இதைப்பறநற்றியும் சொல்லுகிறேன். சுpல நாட்களுக்கு முன்னர் நானும் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கூறினேன். அவர் அதற்குப் பதிலில்லை. அவ்வாறு பதில் சொல்ல அவரால் முடியாது. ஏனென்றால் அவர் கொடுதத்த கடிதத்தின் பிரதி எங்களிடத்தே இருக்கிறது. இப்படியாக சொல்லுற ஒருருக:கு தமிழ் மகளே வாக்குக் போட விரும்புகிறீர்களா. 

ஆக அவர் நெற்றியில் பட்டையை புசிவிட்டு மாறு வேடத்தில் சென்று வந்தாலும் அவருக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது. ஆகவே எங்களுடைய வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கட்சி தான் அந்தக் கட்சி. மேலும் இங்குள்ள இன்னுமொரு கட்சி தேர்தலின்; போட்டியிடுவதும் பகிஸ்கரிப்பததாக அறிவிப்பதாகவே இருக்கிறது. 

ஆக அந்த ;பழைய சயிக்கிளை நம்பி பயனில்லை. அது வரும் வராமலும் போதும். அவர்கள் பகிஸ்கிக்கச் சொல்லுவார்கள். தேர்தல் போட்டி என்று சொல்லுவரர்கள் திரும்பவும் பகிஸ்கரிப்பு என்று சொல்லுவார்கள. அதனை; வேறு விதமாக சொல்லுவார்கள். அவர்கள் திரும்பவும் தேர்தல்களில் போட்டியிடுவார்கள் ஆனால் அவர்களை ஒரு பக்கத்தில் பேசாமல் விட்டு விடுங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப் போறதால் ஏதுவும் நடந்து விடப் போறதில்லை. 

இந்த இருவரையுமு; தவிரத்து விட்டு மற்றப் பக்கத்தில் அரசாங்கத்தின் முகவர்களாக அவர்கள் மர்று வேடத்தில் வருகின்றார்கள் அரச துணையுடன் அரசர்கஙத்தின் முகவர்களாக வருகிற்வர்கள் இருக்கின்றார்கள். அங்கஐன் இராமநாதன் வேலை வாய்ப்பு தருவதாக விண்ணப்படிவங்களை நிரப்பி எமது இளைஞர்களை குழப்பியடித்தக் கொண்டிருக்கிறார்கள்.

இது தேர்தல் சட்டமீநல் அவர் தற்செயலாக் தெரிவு செய்யப்படாலும் கூட அவருக்கு எதிராக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்து அவருக்கு பதவி இல்லாமல் பண்னுவோம். ஏனென்றால் இந்தத் தேர்தல் சட்டங்களை மீறிக் கொண்டிருக்கிறார். தேர்தல் முறை தேர்தல் சட்டங்கiயும் விதிமுறைகளையும் மிறுவதால் அவருக்கு உங்கள் வாக்குகளை நீங்கள் கொடுக்க வேண்டாம். 

டக்களஸ் தேவானந்தாவை பொறுத்தவரையில் பல ஆண்டு காலமாகபஅவர் அதைக் கொடுத்தார் இதைக் கொடுத்தார் என்று சொல்கிற சிலர் இருந்தாலும் அவற்றுக்கான காலம் முடிவடைந்து விட்டது. ஆகNவு இன்னும் Nவுறு புதிய காலம் இருக்கிறது. அதற்கான விலையை கொடுத்து முடிந்தாயிற்கு இனிமேலும் அதற்காக ஆதரவை வழங்க வேண்டுமென்றில்லை.

கிழக்கிற்குச் சென்று பிரச்சாரம் செய்த போது பிள்ளையான் கருணா பற்றியும் நான் சொல்லியிருந்தேன். ஏனென்றால் இன்றைக்கு ஒரு முக்கியமான தருணத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் விரும்பத்தகாத ஆட்சியொன்று ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. ஏங்களுடைய வாக்குகளினாலே அதனை நாங்கள் தடுக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் இலங்கை முழுவதும் ஒரு தெர்குதியாக நடந்த தேர்தல் அது. அப்படிhன தேர்தலிலே நாங்கள் எல்லாரும் ஒன்றாக இணைந்து ஒருநாளும் இல்லாத அளவிற்கு ஒருவருக்கு எதிராக வாக்களித்தும் அதனைத் தடக்க முடியாமல் போய்விட்டது. 

அதற்கு முன்னைய ஐனாதிபதித் தேர்தலிலே எங்களுடைய வாக்கின் மூலமாக நாங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்தத் தடைவ அதனைச் செய்ய முடியவில்லை. அப்படியாக தனி சிங்கள பௌத்த வாக்குகளினாலே ஆட்சி பீடம் ஏறியவர்கள் என்னிக்கையில் அவர்கள் பெரும்பான்மையினராக அறுதிப் பெரும்பான்மையினராக அசைக்க முடியாத பெரும்பான்மையினரா நாட்டிலே இருக்கிற காரணத்தினாலே அவர்கள் ஆட்சி பீடம் ஏறின காரணத்தினால் இனிமேல் எவருக்கும் எதுவுமு; கொடுக்க முடியாது. தமிழ் மக்கள் வேண்டுகிறதை நான் கொடுக்க மாட்டேன் நாங்கள் கொடுக்க நினைக்கிறதைத் தான் நான் கொடுப்பேன் என்று பிரதம மந்திரி மகிந்த சொல்லிக் கொண்டிருக்கிறார். 

ஏனென்றால் அந்தத் தேர்தலிலே அவர்கள் பெற்ற வெற்றி. ஆனால் அது ஒரு தொகுதிக்கான தேர்தல் இப்பொழுது வந்திருப்பது அப்படியல்ல. 225 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரீவு செய்கிற தேர்தல். இந்ததத் தேர்தலிலே தமிழ் மக்களளுடைய பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கானவர்களாக மட்டும் தான் இருக்க வேண்டுமே தவிர அந்த ஆட்சியாளர்களின் முகவர்கள் எவராவது தமிழ் மக்களினாலே தெரிவு செய்யப்படக் கூடாது . 

ஐனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வருகிற இந்தத் தேர்தல் தான் எங்களுக்கு வந்திருக்கிற ஒரே ஒரு சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் நழுவ விடக் கூடாது இந்தச் சந்தர்ப்பத்திலே நாங்கள் வேறு விதமாகச் சிந்திக்கக் கூடாது. எங்களுடைய வாக்குகள் சிதறடிக்கிற வண்ணமாக எங்களுடைய பலம் இல்லாமல் போகிற வண்ணமாக நாங்கள் மாற்று அணிகளுக்கு என்றும் அந்தக் கட்சிக்கு இந்தக்கட்சிக்கு என்றுமு; வாக்களித்துக் கொண்டிருந்தால் எங்களை நாங்களே பலவினமாக்குகிற பாரிய குற்றச் செயலை நாங்கள் புரிவோம். 

இதை நாங்கள் சரியாகப் புரிந்து கொண்டு எங்களை பலப்படுத்துகிறது தான் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் தான். அப்படி நான் சொல்வதற்கு ஒரே காரணம் இன்றைக்கு வடக்கிலும் கிழக்கிலும் இருந்து ஒரு அணியாக பாராளுமன்றத்திற்குச் செல்லக் கூடியது கூட்டமைப்பு மட்டும் தான். வேறு ஏதாவது ஒரு கட்சி ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களையாவது அனுப்புவதற்கு இருக்கிறதா. அவ்வாறு அனுப்பவும் வர்களா முடியாது. 

ஏனெனில் ஒரு ஆசனத்திற்காக கெஞ்சி மன்றாடி உலகமெல்லாம் ஓடித் திரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசனம் கொடுத்தால் தமிழ் மக்களுடைய பலத்திற்கு என்னாவது. ஆகவே மக்கள் சிந்தித்து ஒரே நிலையில் இருந்து ஒரு நிலைப்பாட்டை உறுதி செய்பவர்களாக எங்களது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அது எங்களுடைய இறைமையில் இருந்த எழுகிறது. அது எங்களுடைய சுயநிர்ணய உரிமை. அதை நாங்கள் எதற்கும் விற்றுப் போக மாட்டோம் என்று சொல்லி எங்களுக்கு வாக்களிக்கச் செய்யுங்கள். ஆதரவை வழங்குங்கள் வெற்றி வகையோடு மிண்டும் நாங்கள் உங்களை சந்திப்போம். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post