பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன்? - Yarl Voice பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன்? - Yarl Voice

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன்?

சபாநாயகர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே இவ்வாறு தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 10 ஆவது சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் ஆளும் தரப்பில் இருந்து ஒருவர் இந்த பதவிக்காக தெரிவுசெய்யப்படுவார்.

அதற்கு அமைவாக 10 ஆவது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன முன்மொழியப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலா பிட்டிய பெயரிடப்பட்டுள்ளார்.

குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post