மண்டைதீவில் பொது மக்களின் காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்கு கடும் எதிர்ப்பு - அளவீட்டு பணிகளும் இடைநிறுத்தம் - Yarl Voice மண்டைதீவில் பொது மக்களின் காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்கு கடும் எதிர்ப்பு - அளவீட்டு பணிகளும் இடைநிறுத்தம் - Yarl Voice

மண்டைதீவில் பொது மக்களின் காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்கு கடும் எதிர்ப்பு - அளவீட்டு பணிகளும் இடைநிறுத்தம்


யாழ்ப்பாணம் மண்டைதீவில் பொது மக்களுக்குச் சொந்தமான தனியார் காணியை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு அளவீடு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் அரசியல் வாதிகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் பொது மக்களின் காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி பொது மக்களினதும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளினதும் கடுமையான எதிர்ப்புகளையடுத்து கைவிடப்பட்டுள்ளது. 

மண்டைதீவில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள பகுதியில் பொது மக்களின் 62 பரப்புக் காணி இருக்கின்ற நிலையில் அவற்றை கடற்படையினருக்கு சுவிகரிப்பற்காக நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் குறித்த காணி அளவீடு செய்யும் இடத்திற்கு முன்னாள் இன்று காலையிலையே திரண்டிருந்தனர். 
இதன் போது நில அளவைத் திணைக்களத்தினர் குறித்த காணியை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீட செய்வதற்கு அப்பகுதிக்கு வந்திருந்தனர். 

ஆயினும் குறித்த காணிகள் தங்களுடையவை என்றும் இதனை தாம் ஒருபோதும் வழங்கப் போவதில்லை என்றும் தங்களது காணிகளை தங்களுக்கே வழங்க வேண்டுமென்றும் நில அளவைத் திணைக்களத்தினரிடம் காணி உரிமையாளர் தெரிவித்தனர்.

இதன் போது குறித்த காணிகளை அளவீடு செய்வதனை நிறுத்துவதாயின் எழுத்துமூலமான ஆட்சேபனையை வழங்க வேண்டுமென்று நில அளவைத் திணைக்களத்தினர் கேட்டுக் கொண்டனர். இதற்கமைய காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுமாக இணைந்து கையொப்பம் இட்டு எழுத்து5லமான ஆட்செபனைக் கடிதத்தை வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர். மேலும் குறித்த காணி அளவீடு செய்வதற்கு இருந்த இடத்தில் பெருமளவிலான பொலிஸாரும் கடற்படையினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை பொது மக்களுக்குச் சொந்தமாக காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது. அதனை மக்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கோரியும் அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பொது மக்களின் காணிகளைச் சவீகரிக்கும் நடவடிக்கைக்;கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்னம் சுகாஷ். நடராஐh காண்டிபன் உள்ளிட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் பல்வேறு தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
0/Post a Comment/Comments

Previous Post Next Post