புத்தர் சிலை பொறிக்கப்பட்ட சாறி அணிந்த பெண் அதிரடியாக கைது - Yarl Voice புத்தர் சிலை பொறிக்கப்பட்ட சாறி அணிந்த பெண் அதிரடியாக கைது - Yarl Voice

புத்தர் சிலை பொறிக்கப்பட்ட சாறி அணிந்த பெண் அதிரடியாக கைது


புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட சாரியை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு இன்று வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மருத்துவர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண் அந்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில் அவரை பார்க்க வந்துள்ளார்.

நேற்று இரவு மருத்துவரது மகளின் வெள்ளவத்தை பகுதியிலுள்ள இல்லத்தில் அவர் தங்கியிருக்கின்றார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் ஊடாக மருத்துவரது மகளுடன் பொலிஸார் தொடர்புகொண்டு பிறிதொரு சாரியை குறித்த பெண்ணுக்கு வழங்கும்படி பணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post