வன்னியில் ஆக்கிரமிக்கப்படும் தொல்லியல் சின்னங்கள் - Yarl Voice வன்னியில் ஆக்கிரமிக்கப்படும் தொல்லியல் சின்னங்கள் - Yarl Voice

வன்னியில் ஆக்கிரமிக்கப்படும் தொல்லியல் சின்னங்கள்



வன்னியின் மூன்று மாவட்டங்களான வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்லியல் திணைக்களத்தின் வசம் தற்போது 121 சின்னங்கள் உள்ளபோதிலும் 43  சின்னங்களிற்கு மட்டுமே அரச இதழ் உள்ளதாக குறித்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அளித்த பதிலிலேயே மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டபோதும் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கோரிய விண்ணப்பத்திற்கும் சிங்கள மொழியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 43 இடங்களும் , மன்னார் மாவட்டத்தில் 25 இடங்களும் உள்ள அதே நேரம் 
முல்லைத்தீவு மாவட்டத்தில்  53 இடங்கள் உள்ளதாக திணைக்களம் உறுதி செய்துள்ளது. 

இதேநேரம்  வவுனியா மாவட்டத்தில் உள்ள  43  இடங்களில் 8 இடங்களிற்கும் , மன்னார் மாவட்டத்தின்  25 இடங்களில் 14 இடங்களிற்கு மட்டுமே அரச இதழ்  உள்ள அதே நேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின்  53 இடங்களில் 23 இடங்களிற்குமாகவே மொத்தம் 43 இடங்களிற்கு அரச இதழ்  உள்ளதாக திணைக்களம் உறுதி செய்துள்ளது. 

இதன் அடிப்படையில் 3 மாவட்டத்திலும் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் 121 இடங்களில் 78 இடங்களிற்கு அரச இதழ் இல்லை என்பதன் அடிப்படையில் அரச இதழ் மூலம் ஆளுகை செய்யும் இடங்களைவிடவும் அரச இதழ் இன்றி ஆளுகை செய்யும் இடங்களே அதிகமாக கானப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post