இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு - Yarl Voice இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு - Yarl Voice

இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு




கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது.

 அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.

 இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.

 இச்சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளையதினம் கதவடைப்பு போராட்டம்  இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும், மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. 

எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்கள, தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம்.

 ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post