ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் கிழக்கிலும் விரிவுபடுத்த வேண்டும் - நிஷாந்தன் கோரிக்கை - Yarl Voice ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் கிழக்கிலும் விரிவுபடுத்த வேண்டும் - நிஷாந்தன் கோரிக்கை - Yarl Voice

ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் கிழக்கிலும் விரிவுபடுத்த வேண்டும் - நிஷாந்தன் கோரிக்கை


திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெறும் உண்ணாவிரதம் கிழக்கிலும் நடாத்த வேண்டும் என ஏற்பாட்டுக்குழுவிடம் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.செல்வச் சந்நிதி ஆலயத்தில்இ உண்ணாவிரம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்துஇ கிழக்கிலும் அதேநேரத்தில் நடாத்த ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்வேண்டும் என அப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்

மட்டக்களப்பு வெய் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுஇ கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சுவீகரன் நிஷாந்தன் மேலும் கூறியுள்ளதாவதுஇ 'தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடையை உடைப்பதற்காக வடக்குஇ கிழக்கில் உள்ள 10க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய கட்சிகள்இ ஒன்றிணைந்துள்ளமை பாராட்டத்தக்க விடயம். இந்த ஒற்றுமை என்பது எமது இன நலனுக்காக நீடிக்க வேண்டும் என்பதே எமது அனைவரது விருப்பம்

மேலும் எதிர்வரும் 26ம் திகதி செல்வசந்நிதி ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதமும் 28ம் திகதி வட.கிழக்கு ரீதியில் ஹர்தால் செய்வதாகவும் தீர்மானம் எடுத்துஇ அதனை அறிவித்தது வரவேற்கத்தக்க விடயம்.

இருந்தபோதும் இந்த வடக்கைச் சேர்ந்த எமது தலைவர்கள் இந்த முடிவை எடுக்கும் முன்னர் கிழக்கு மாகாணத்தையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று அம்பாறையில் இருக்கின்ற ஒருவரோ மட்டக்களப்பில் இருக்கின்ற ஒருவரோ செல்வச் சந்நிதிக்கு சென்றுஇ அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வது என்பது இந்த அச்சுறுத்தலான நிலையில் ஒரு சாதாரண விடயமல்ல

வட.கிழக்கு இணைந்த தாயகம் என வாயால் மாத்திரம் தேசியம் கதைக்கின்றோம். ஆனால் ஒரு விடயம்வரும்போது நாங்கள் யாழ்ப்பாணத்துக்குள் முடங்கி கொள்கின்றோம். அப்போது ஏன் கிழக்கைப்பற்றி சிந்திப்பதில்லை கிழக்கில் மாவீரர்கள் இல்லையா? மாவீரர் குடும்பங்கள் இல்லையா? போராளிகள் இல்லையா? எம் மக்களுக்கு உணர்வில்லையா?

இந்த விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்கெடுத்ததுடன் அதிகளவான போராளிகளையும் அதிகளவான பாதிப்பை கொண்டதாக இந்த கிழக்கு மாகாணம் இருக்கின்றது. இருந்தபோதும் தியாகதீபம் தீலீபனின் நினைவை அனுஷ்டிப்பதற்கு இந்த மக்களுக்கு உரிமை இல்லையா? அவருக்காக கண்ணீர் விடுவதற்கு எம்மக்களுக்கு உரிமை இல்லையா?

நீங்கள் செய்யும் இப்படியான சிறுசிறு தவறுகளினால்தான் எம்மக்கள்இ இளைஞர்கள் இன்று மனங்களில் இருக்கின்ற வெறுப்புக்களால் அரசதரப்புக்களான பிள்ளையான்இ கருணாஇ வியாழேந்திரன் போன்றோர்களிடம் தேர்தல் காலங்களிலும் சரிஇ ஏனைய காலங்களிலும் சரி அங்கு செல்லுகின்றனர். ஆகவே இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

பெருமளவிலான கிழக்கைச் சேர்ந்த போராளிகள் வடக்கில்தான் இறந்திருக்கின்றனர். தமிழர் தாயகத்தில் தமிழர் தேசியம் சம்மந்தப்பட்ட எந்த விடயமாக இருந்தாலும் வட.கிழக்கு பிரதிநிதித்துவப்பட்டுத்தான் செய்யவேண்டும்.

இந்த தலைவர்கள் எடுத்த தீர்மானங்களை மதிக்கின்றேன்.  யாழ்.செல்வச் சந்நிதியில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதம்இ  அதேநேரம் கிழக்கில் மட்டக்களப்பில் மாமாங்க ஆலயமோ அல்லது கொக்கட்டிச்சோலை ஆலயத்திலோ நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்' என அவர் வலியுறுத்தியுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post