நல்லிணக்க விஐயமாக பௌத்த மதகுருமார் யாழ்ப்பாணம் வருகை - Yarl Voice நல்லிணக்க விஐயமாக பௌத்த மதகுருமார் யாழ்ப்பாணம் வருகை - Yarl Voice

நல்லிணக்க விஐயமாக பௌத்த மதகுருமார் யாழ்ப்பாணம் வருகை


மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஆஸிர்வாதத்மக பிரித் சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள் இன்று நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தனர். வந்த குழுவினர் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சாமாதாணத்தினை வலிறுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு அங்கமாக கடந்த 30 வருட காலத்தில் யுத்தத்தின் பால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு கோட்டின் கீழ் வாழும் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர். போருக்கமுவ ஸ்ரீ ஆலோகராம விகாரை மற்றும் கௌடுமுன்ன இந் சாரராம விகாரையின் விகாரதிபதி கின்னலியே ஆயுபால சுவாமிகள் கலந்து கொண்டிருந்தார். 

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தனர். இந்த உதவி வழங்கும் நிகழ்வில் 25 கர்பிணி பெண்களுக்கு குழந்தை பேற்றின் பின்னரான உதவி பொருட்களும்இ சத்துணவுகளும்இ  100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்இ 150 பேருக்கு உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post