இந்திய உயர்ஸ்தானிகர் அங்கஐன் சந்திப்பு - யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice இந்திய உயர்ஸ்தானிகர் அங்கஐன் சந்திப்பு - யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice

இந்திய உயர்ஸ்தானிகர் அங்கஐன் சந்திப்பு - யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு


இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேலை சந்தித்தார்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி விவசாய அறிவியல் சம்மந்தமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார கால்வாய் வசதிகள் பற்றியும் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை சம்மந்தமான வளர்ச்சிகள் தொடர்பாகவும் யாழ்ப்பாணத்திற்கு தேவையான வீட்டுத்திட்டங்கள் சம்மந்தமாகவும் கல்வி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு அங்கஜன் இராமநாதனால் நினைவுபரிசு ஒன்றும் வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் அவர்களும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post