அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் - அணி திரள தமிழ் கட்சிகள் அழைப்பு! - Yarl Voice அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் - அணி திரள தமிழ் கட்சிகள் அழைப்பு! - Yarl Voice

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் - அணி திரள தமிழ் கட்சிகள் அழைப்பு!





எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடைத் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன.

இதன்போது,  வரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள்  மற்றும் வீடுகளில் இருந்தவாறு மக்கள் தியாகி திலீபனை நினைவுகூருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு  கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதவடைப்புப் போராட்டத்திற்கு, சமூக சிவல் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வெண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மொழியை பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post