யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஐனிதிபதி வழங்கியுள்ள புதிய பதவி - Yarl Voice யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஐனிதிபதி வழங்கியுள்ள புதிய பதவி - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஐனிதிபதி வழங்கியுள்ள புதிய பதவிஇலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

2194/ 29 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட "இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி" க்கு, அமைச்சுக்களுக்கும், இராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும், பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் நேற்று 22ஆம் திகதி, புதன்கிழமை முதல் நியமனம் செய்யப்படுவதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post