யாழ்ப்பாண புதிய இரானுவத் தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் முன்வைத்துள்ள கோரிக்கை - Yarl Voice யாழ்ப்பாண புதிய இரானுவத் தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் முன்வைத்துள்ள கோரிக்கை - Yarl Voice

யாழ்ப்பாண புதிய இரானுவத் தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் முன்வைத்துள்ள கோரிக்கை


வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது அதனை இந்த அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்


யாழ் மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஐர் ஜெனரல் செனரத் பண்டார இன்று நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி  மேஐர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post