யாழில் நலன்புரி முகாம்களிற்கு விஜயம் செய்த அமைச்சர் - Yarl Voice யாழில் நலன்புரி முகாம்களிற்கு விஜயம் செய்த அமைச்சர் - Yarl Voice

யாழில் நலன்புரி முகாம்களிற்கு விஜயம் செய்த அமைச்சர்
கிராமிய வீடமைப்பு,  நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

காலை 10 மணியளவில்,  உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு கிராம சேவகர் பிவிவுக்குற்பட்ட சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நலன்புரி நிலையத்தில் 81 குடும்பங்களை சேர்ந்த 259 பேர் வசித்து வருகின்றார்கள்.

1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரனமாக மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து 30 வருடங்களாக  நலம்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர்.

குறித்த நலன்புரி நிலையத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அங்கு வசித்துவரும்  மக்களுடைய கருத்துக்களையும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது தங்களுடைய சொந்த காணிகளில் சென்று  வாழ்வதற்கு எற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய கோரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கதைத்து விரைவில் நல்லதொரு முடிவினை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post