அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் - யாழ் மேலதிக அரச அதிபர் பிரதீபன் - Yarl Voice அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் - யாழ் மேலதிக அரச அதிபர் பிரதீபன் - Yarl Voice

அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் - யாழ் மேலதிக அரச அதிபர் பிரதீபன்



அரச சேவையில்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன் தெரிவித்தார்


பட்டதாரி பயிலுநர்களாக அரசசேவையில் இணைக்கப்பட்டவர்களிற்கான பயிற்சிகள் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்


பல எதிர்பார்ப்புகளோடு பட்டதாரிகளாகிய நீங்கள்  அரச சேவையில் இணைந்திருக்கின்றீர்கள் ஆனால் உங்களை விட அதிக எதிர்பார்ப்புகளோடு பொதுமக்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுடைய சேவை, தேவைகளை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள் 

உண்மையாக நீங்கள் நீண்ட காலமாக பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிகளைபூரணப்படுத்தி உங்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றிருக்கின்றீர்கள் உங்களைப் போல ஒரு சிலர் தொழில் வாய்ப்பை பெறாத நிலையிலும் இருக்கிறார்கள்

எங்களுடைய சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது அதனை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு ள்ளது ஜனாதிபதியினுடைய "சுபீட்சத்தினுடைய  நோக்கு" என்ற திட்டத்தின் கீழ்  தொழில் வாய்ப்பை பெற்றிருக்கிறீர்கள் உங்களுக்கான பயிற்சி நெறிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தலைமைத்துவம், முகாமைத்துவம் மற்றும் அரச திணைக்களங்கள் தொடர்பான விடயங்கள் ,தனியார் திணைக்களங்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் திட்டமிடல் மற்றும் கள ஆய்வு தொடர்பான விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் ஆரம்பமாகவிருக்கின்றது அந்த வகையிலே நீங்கள் இன்று திட்டமிடல் மற்றும் கள ஆய்வுக்கு பயிற்சிக்காக இன்றைய தினம் அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள் 

உங்களுடைய பயிற்சியின் போது  உங்களது சமூகத்தில் அல்லது உடைய பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள்  விடயங்களை ஆராய்ந்து முடிவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்னர் நீங்கள் அந்த அறிக்கை தொடர்பான ஒரு (presentation) நமக்கு வழங்க வேண்டும்   அதனுடைய நோக்கம் இந்த அரச சேவையில் இருக்கின்ற விடயங்களை தெளிவு படுத்துவதற்காகவே அதேவேளையில் உங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் 

எங்களுடைய யாழ்ப்பாண மாவட்டத்திலே நிறைய வேலையற்ற பட்டதாரிகள் உள்ள சந்தர்ப்பத்திலே எனினும் நீங்கள்  அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டு விட்டீர்கள் உண்மையிலேயே இத்தகைய பயிற்சிகள் கடந்த காலங்களிலே பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி என்பது மிகவும் குறைவானது எனினும் இம்முறைமிகவும் நேர்த்தியான முறையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன சரியான முறையில் இந்த பயிற்சிகளை பெற்றுக் கொள்வதன் மூலமாகவே நிறைய அறிவு திறன் மனப்பாங்கு போன்ற விடயங்களை நீங்கள் உங்கள்  மட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ள முடியும் சரியான முறையில் இந்த பயிற்சிகளை நீங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் 

முன்னைய காலங்களிலே கூறுவார்கள் கடின உழைப்பு ஹார்ட் வேக் தற்போது சொல்லுவார்கள் ஸ்மார்ட் வேக் இன்றைய சமூகப் போக்கிற்கிணங்க உங்களுடைய போக்குகளையும் தொழில் ரீதியான நுட்பங்களையும் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் ஏனென்றால் மக்களுடைய எதிர்பார்ப்பும் எங்களுடைய  எதிர்பார்ப்பும் இணைகின்ற போதுதான் மக்களுக்குரிய மேன்மையான திட்டங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது  

எங்களுடைய மக்கள் அதிலும்   பெருமளவிலான பட்டதாரிகள் வடமாகாணத்தில் கடமை செய்ய உள்ளீர்கள் அத்தோடு அதிகளவானோர் யாழ்மாவட்டத்தில் கடமை செய்ய உள்ளீர்கள் நீங்கள்எங்களுடைய மக்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு பொக்கிஷம் அந்த வகையில் மக்களுக்குரிய சேவையினை  திறம்பட செயல்படுத்த வேண்டும் அரச உத்தியோகத்தர்கள் பற்றிபெரும்பாலும் குறிப்பிடப்படும் விடயம் மனப்பாங்கு என்ற விடயம் எனவே அவ்வாறான குற்றச் சாட்டுக்களை இனிவரும் காலங்களில் இந்த பயிற்சிகள் மூலம்  இல்லாது செய்து உங்களுடைய திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்


பட்டதாரி பயிலுநர்களிற்கான பயிற்சிகள் பற்றிய கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இன்று   நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலர் கனபதிப்பிள்ளை மகேசன் தலமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரிகேடியர் ஐனக விஐயசிங்க,யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜீவசுதன் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post