நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈபிடிபியிடம் கோரிக்கை! - Yarl Voice நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈபிடிபியிடம் கோரிக்கை! - Yarl Voice

நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈபிடிபியிடம் கோரிக்கை!


கடந்த ஆட்சிக் காலத்தல் சுகாதார சிற்றூழியர்களாக நியமனம் வழங்கப்பட்டும் அந்த தொழில்வாய்ப்பில் உள்வாங்கப்படாது கடந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றமடைந்த சுகாதார சிற்றூழியர்கள் தமது நியமனத்தை உறுதி செய்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த குறித்த நியமனத்தில் பாதிக்கபட்ட சிற்றூழியர்கள் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது  - நீண்டகாலமாக சுகாதார சிற்றுர்ழியர்களாக பணிபுரிந்துவரும் நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமக்கு நியமனம் வழங்கப்படுவதாக கூறி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்ததாக சிற்றுரியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆனால் அந்த நியமனங்களில் பல்வேறு குழறுபடிகள் இருந்தமை தொடர்பில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அவ் நியமனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் நீண்டகாலமாக சேவையை புரிந்துவந்த பல சிற்றூழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் அக்காலப்பகுதியில் தமது குடும்ப வறுமையை காரணம் காட்டி சமுர்த்தி நிவாரண முத்திரை வழங்கப்பட்டிருந்தும் இந்த நியமனத்துக்கான கடிதங்கள் கிடைதடதமையை காரணம் காட்டி சமுர்த்தி உதவி திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த சிற்றூழியர்கள் பெற்றுத்தருமாறு கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனிடம் கோரியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிற்றூழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post