பாரதியாரின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு - Yarl Voice பாரதியாரின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு - Yarl Voice

பாரதியாரின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
மகா கவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழில் அறுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு தூபியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந் நிகழ்வு நடைபெற்ளது.

இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன், 
யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய துணை தூதரக அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post