கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் விஜயம் - Yarl Voice கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் விஜயம் - Yarl Voice

கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் விஜயம்
கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலைக்கு இன்று (15) நண்பகல் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன்  சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

2019 ஆண்டு ஜனவரி மாதம் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்பு முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வேளையிலும் இங்கு விஜயம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இம்முறை பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றபின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தப் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு இப்பிள்ளைகளை சந்தித்தமை மனநிறைவை தருவதாகவும் குறிப்பிட்டார். 

அத்துடன் இப்பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 18 மாணவர்களுக்கு அவர்களுடைய தொழில் முயற்சிக்கான பொருளாதர உதவிகளை தனது பாராளுமன்ற ஊதியத்திலிருந்து வழங்குவதாக இதன்போது உறுதியளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post