தமிழரசின் புதிய செயலாளர் கிழக்கிற்கே வழங்கப்பட வேண்டும் _ சிவஞானம் - Yarl Voice தமிழரசின் புதிய செயலாளர் கிழக்கிற்கே வழங்கப்பட வேண்டும் _ சிவஞானம் - Yarl Voice

தமிழரசின் புதிய செயலாளர் கிழக்கிற்கே வழங்கப்பட வேண்டும் _ சிவஞானம்


தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும்.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் /கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்து துரைராஜா சிங்கம் அண்மையில் 
தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல கருத்துக்கள் பரப்பப்பட்டு 
வருகின்றன. எனினும் யாரை நியமிப்பது என கட்சி கூடி தீர்மானிக்கும்.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு 
மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்தே இருந்தவர்.எனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராக இருப்பதே 
பொருத்தமானதாக இருக்கும்.

பொதுச் செயால்லாளர் யார் என தீர்மானிக்கப்படவில்லை.ஆனால் அது 
தொடர்பில் பல தரப்பினரும் பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் எனது நிலைப்பாடு புதிய செயலாளர் மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும். இதனை நான் ஏற்கனவே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூறி உள்ளேன் 
என்றார்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post