நாளை இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணையுங்கள் - ஒன்றிணைந்த ஐனநாயக இளைஞர் அமைப்பு - Yarl Voice நாளை இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணையுங்கள் - ஒன்றிணைந்த ஐனநாயக இளைஞர் அமைப்பு - Yarl Voice

நாளை இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணையுங்கள் - ஒன்றிணைந்த ஐனநாயக இளைஞர் அமைப்பு





அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விழக்கினை மாத்திரம்  ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அமைப்பின் பிரதிநிதி அ.பெனிஸ்லஸ் துஷான் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....

எங்களுடைய உடனடி நோக்கமாக தற்போது கொன்டுவரப்பட்டிருக்கும் 20 வது திருத்தத்திற்கு எதிரான விழிப்புணர்வை நாங்கள் செய்துகொன்டிருக்கின்றோம்.

மிக முக்கியமான இந்த ஜனநாயக விரோதமான 20 வது திருத்தம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டப்பட வேண்டும் என்றும்.

அத்தோடு எங்களுடைய அரசியல்வாதிகளுக்கும் இது சார்ந்த விழிப்புணர்பு கிடைக்க வேண்டும் என செயல்பட்டு வருகின்றோம்.

கடந்த மூன்று தினங்களாக மதத் தலைவர்கள்,  சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களையும் நாங்ள் சந்தித்துள்ளோம்.

உதாரணமாக மதகுருமார்கள், வணிகர் கழகம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கம், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும்  இலங்கை தமிழ் அதிபர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளோம்.

குறித்த பிரதிநிதிகளுடைய கலந்துரையாடலுக்கும் ஏற்ப நாளை நாங்கள் எங்களுடைய மனுக்களை எங்களுடைய சமுகம் மற்றும் ஏனைய சமுகத்தில் இருந்து தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்றம் உறுப்பினர்களுக்கும் அனுப்பவுள்ளோம்.

அத்தோடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கும் எங்களுடைய மனுக்களை அனுப்பவுள்ளோம்.

அத்தோடு மிக முக்கியமாக நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்வது யாதெனில் நாளை 20 ஆம் திகதி 20 ஆவது மணி (இரவு 8) நேரத்தில் உங்கள் வீடுகளில் ஒரு விழிர்ப்புணர்வு போராட்டத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

தற்போதய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரனமாக அது சார்ந்த சட்டங்களை பின்பற்றி குறித்த மணி நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு உங்களுடைய வீட்டின் மின் விழக்குகளை அணைத்து இருளாக இருக்கும் காலப்பகுதியில் ஒரு ஒளி விழக்கினை ஏற்றி உங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.



 

0/Post a Comment/Comments

Previous Post Next Post