20 ஆவது திருத்தமும் விளைவுகளும் குறித்து யாழில் இடம்பெற்ற அரசியல் ஆய்வரங்கம் - Yarl Voice 20 ஆவது திருத்தமும் விளைவுகளும் குறித்து யாழில் இடம்பெற்ற அரசியல் ஆய்வரங்கம் - Yarl Voice

20 ஆவது திருத்தமும் விளைவுகளும் குறித்து யாழில் இடம்பெற்ற அரசியல் ஆய்வரங்கம்
20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வு, வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆய்வரங்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தொடக்க, உரையை யாழ்ப் ஆற்றினார்.யாழ்ப்பான பல்கலைக்கழக சட்டத் துறையின் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி திருமதி கோசலை மதன்  “20ஆவது திருத்தம்” என்ற தலைப்பில் சிறப்புரையை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான  எம்.ஏ.சுமந்திரன், “20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும்” என்ற தலைப்பில் சட்ட உரையையும் ஆற்றினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post