யாழ். போதனாவில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை - Yarl Voice யாழ். போதனாவில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை - Yarl Voice

யாழ். போதனாவில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை

கொரோனா தாக்கம் அதிகரித்த ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான 22 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 ஆயிரத்து 163 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிய பரிசோதனையில் புங்குடுதீவுப் பென்மணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட மறு தினத்தில் இருந்து மேற்கொண்ட ஆய்வுகளின் எண்ணிக்கையே இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் 22 நாட்களிற்குள் 5 ஆயி்த்து 163 பேருக்கு ஆய்வு செய்த காலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆரம்ப நாட்களில் நூறை அண்டி எண்ணிக்கையில் இடம்பெற்ற பரிசோதனைகள் தற்போது 200 ஐ தாண்டி 300ஜ அண்மித்த எண்ணிக்கையில. பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பரிசோதனையில் வடக்கின் 5 மாவட்ட வைத்தியசாலைகள் மட்டுமன்றி வடக்கில. அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கை் சேர்ந்தவர்களிற்கான பரிசோதனைகளும் போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post