இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு - Yarl Voice இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு - Yarl Voice

இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு


யாழ்ப்பாணம் பலாலி கட்டளைத் தலைமையகத்திற்கு உட்பட்ட இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள பிரிகேடியர் சுமித் பிறேமலால்  இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாகசந்தித்திருந்தார்

 குறித்த சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில்   ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பாகஆராய்ந்ததோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்தனர்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணாஅச்ச நிலைமையினை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு எதிர் நோக்குவது சமூக தொற்று ஏற்படாமல் எவ்வாறுதடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் ஆராய்ந்தனர்

ஏற்கனவே 51ஆவது கட்டளைத்தளபதியாக கடமையாற்றியவரின் சேவைக்காலம் முடிவடைந்து ஓய்வு பெற்று சென்றதன் பின்னர் புதிதாக பதவியேற்ற 51 வது கட்டளைத்தளபதி இன்றைய தினம் அரச அதிபரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் ராணுவத்தின் 512 ஆவது படையணியின்  கட்டளைத் தளபதி மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post