யாழ் நகர கடைத் தொகுதி பிரச்சனைக்கு மணிவண்ணண் முன்வைத்துள்ள பொறிமுறை - Yarl Voice யாழ் நகர கடைத் தொகுதி பிரச்சனைக்கு மணிவண்ணண் முன்வைத்துள்ள பொறிமுறை - Yarl Voice

யாழ் நகர கடைத் தொகுதி பிரச்சனைக்கு மணிவண்ணண் முன்வைத்துள்ள பொறிமுறை
பல காலமாக இருந்து வருகிற யாழ் நகர பகுதியில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடை தொகுதி பிரச்சினையை தொடர்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைத்த பொறிமுறை யாழ்.மாநகர சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

பல தடைகளுக்கும் பலரின் அரசியல்ரீதியான காழ்புணர்ச்சிகளுக்கும் மத்தியில் இன்றைய யாழ்.மாநகர சபை அமர்வில் பங்குபற்றிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்றைய சபை அமர்வில் கூறியதாவது.

கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த மாநகரசபை அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாமையினால் எனக்கு பேரூந்து நிலையகடைகள் தொடர்பான விடயம் பெருளவில் தெரியாது. கடந்த காலங்களில் நடந்து முடிந்த விடயங்களை நாங்கள் கிண்டிக் கொண்டு இருப்பதனால் இதற்கு தீர்வு எடுக்க முடியாது. அதை எல்லாவற்றையும் விட்டு விட்டு இன்றில் இருந்து நாம் என்ன செய்வேண்டும் என்பதனை யோசிப்போம்.

என்னைப் பொருத்தவரை நகரஅபிவிருத்தி என்பது முக்கியமான விடயம். நுகரம் அழகுபடுத்தப்பட வேண்டும் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. அதே நேரம் நாங்கள் ஒரு சமநிலையை பேணவேண்டும். அதனால் பாதிக்கப்படகூடியவர்களுக்கு வரகூடிய பாதிப்பை எவ்வளவு தூரம் குறைக்கலாம் என்பது பற்றியும் கருத்தில் எடுக்கவேண்டும்.

அந்த இடத்தினை அழகுபடுத்துவதற்கு முதல் அவர்களுக்கு மாற்று இடம் ஒன்றினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் தொழில் வாய்மை இழக்காமல் பார்த்தக்கொள்ளவேண்டும். என்னைப்பொறுத்தவரை மாநகர சபை மூன்று அல்லது நான்கு இடங்களை தெரிவு செய்யவேண்டும். அத்துடன் இங்குள்ள கட்சிகளின் ஒவ்வொரு அங்கத்தவர்களையும் வியாபாரிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து இதில் எது அவர்கள் இடம்மாறக்கூடிய பொருத்தமான இடம் என்பதனை நாம் ஆராய்வோம்.

இவ்விவாதத்தை தேவையில்லாமல் நீடித்துக் கொண்டு செல்லாமல் நாங்கள் ஒரு பொருத்தமான இடத்தை அவர்களுக்கு கொடுத்து அவர்களை வியாபாரம் செய்ய செய்து விட்டு பஸ் நிலையத்தினை மிகவும் அழகான இடமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்

அதன் பிரகாரம் இப் பொறிமுறை சபையினால் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் சார்பாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. விஸ்வலிங்கம் மணிவண்ணன், நிபாஜீர், குலேந்திரராசா, சிறிதரன், திருமதி விஜயகாந். மற்றும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி சார்பில் ஒருவர். ஏன அக்குழு சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post