கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு - Yarl Voice கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு - Yarl Voice

கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இதில் கருனாரட்ணம் கருனானந்தன்(வயது36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயர்ந்துள்ளார்.தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post