கொரோனா வைத்திய சாலைகள் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியர் குழு ஆராய்வு - Yarl Voice கொரோனா வைத்திய சாலைகள் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியர் குழு ஆராய்வு - Yarl Voice

கொரோனா வைத்திய சாலைகள் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியர் குழு ஆராய்வு
கிளிநொச்சியில் அமையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலையை அமைக்கும் பணிக்காக தற்போது கொரோனா தடுப்பு வைத்தியசாலைகளாக இயங்கும் வெலிகந்தை மற்றும் கரடியனாறு வைத்தியசாலைகளை மாவட்ட வைத்தியர்கள் குழு நேரில் சென்று ஆராய்ந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிருஸ்னபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நவம் அறிவுக் கூடமாக இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளதனால் பிற மாவட்டங்களில் தற்போது இயங்கும் வைத்தியசாலைகளை நேரில் பார்வையிட்டு அதனை ஒத்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து நான்கு வைத்தியர்கள் குழாம் இந்த பயணத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பயணித்த வைத்மியர்கள் பொலநறுவை மாவட்டத்தின் வெலிகந்தை வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு வைத்தியசாலைக்கும் சென்று நிலமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த்தோடு அந்த வைத்தியசாலைகளில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முறமைகள் தொடர்பிலும் அறிந்து கொண்டனர் 

இதேநேரம் வெலிக் கந்தை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை ஒரு பகுதியில் இயங்குகின்றபோதும் ஏனைய பிரிவுகளும் வெளி நோயாளர் பிருவும் உரிய பாதுகாப்பு முறமையில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post