தொற்றாளர்களுடன் பழகியவர்கள் இனிமேல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் - இரானுவ தளபதி அறிவிப்பு - Yarl Voice தொற்றாளர்களுடன் பழகியவர்கள் இனிமேல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் - இரானுவ தளபதி அறிவிப்பு - Yarl Voice

தொற்றாளர்களுடன் பழகியவர்கள் இனிமேல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் - இரானுவ தளபதி அறிவிப்பு
கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு இன்று முதல் உட்படுத்தப்படுவார்கள் என   இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய
செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளப்படுத்தப்படும் நபர்கள் நேரடியாக சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய முதற்கட்ட நபர்கள், இனி தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப்பட மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், அவர்களை அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதாக கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறாது, சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுமானால் அந்த பகுதிகளில் ஊரடங்கை நீக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post