வேலையில் இருந்து வீடு நோக்கி சமூக விழிப்புணர்வு உந்துருளி பயணம் யாழில் ஆரம்பம் - Yarl Voice வேலையில் இருந்து வீடு நோக்கி சமூக விழிப்புணர்வு உந்துருளி பயணம் யாழில் ஆரம்பம் - Yarl Voice

வேலையில் இருந்து வீடு நோக்கி சமூக விழிப்புணர்வு உந்துருளி பயணம் யாழில் ஆரம்பம்




"வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்" சமூக விழிப்புணர்ச்சி க்கான சைக்கிள் பயணம்  இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில்இருந்து ஆரம்பிக்கப்பட்டது.


 இத் துவிச்சக்கர வண்டி பயணம் கிளிநொச்சி வரை சென்றடைய வுள்ளது., கொரோனா , போதைப்பொருள் பாவனையை தடுத்தல், சூழல் மாசடைதலை தடுத்தல், உடல் ஆரோக்கியத்தை பேணுதல் போன்ற கருத்துக்களை முன்வைத்து இந்த துவிச்சக்கர வண்டிப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் கருத்து தெரிவிக்கையில். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுப்பதற்கும் இந்த துவிச்சக்கர வண்டி ஒரு முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

  எமது பகுதிகளில் போதைவஸ்து பாவனைக்கு எதிராக இளைஞர்களினால் ஏற்படுகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் சுகாதாரம் மேம்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக  இந்த சைக்கிள் பயணம் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சியில் நிறைவடையவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post