யாழில் குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடயில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் கைது - களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு - Yarl Voice யாழில் குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடயில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் கைது - களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு - Yarl Voice

யாழில் குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடயில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் கைது - களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு


யாழில்  பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களோடு  தொடர்புடைய நால்வர்  யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்


கொடிகாமம் ,சாவகச்சேரி ,கோப்பாய் அச்சுவேலி ஆகிய இடங்களில் வீதிகளில் செல்வோரை தள்ளி விழுத்தி காயப்படுத்தி நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த நால்வர் இன்றைய தினம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 பவுண் நகை ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிராம் கேரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது


 கடந்த மாதம் அச்சுவேலி பிரதேசத்தில் சிறு பிள்ளையுடன்  மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது  மோட்டார் சைக்கிளின்  இலக்கத் தகட்டை சூட்சுமமான மாற்றிப் பயணித்தோடுமோட்டார் சைக்கிளை தள்ளி விழுத்தி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை காயப்படுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்த சம்பவம் போன்ற ஆறுக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

 யாழ்ப்பாண குடாநாட்டின் மேலும் பல பகுதிகளில் வீதியில் பயணிப்போரை தள்ளி விழுத்தி அல்லது காயப்படுத்தி அவர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 பவுண் நகை  கைப்பற்றப்பட்டுள்ள தோடு  வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட வங்கி சிட்டைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது

கைப்பற்றப்பட்ட நகைகளின் சில முறைப்பாடு பதியப்படாத வேறு சில நகைகளும்வெள்ளை முத்து பதித்த நகைகளும்  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

கைப்பற்றப்பட்ட நகைகளில் சில நகைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதியப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்கள்

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பொருட்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் வழிகாட்டலில்
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால்பிரான்சிஸின் நெறிப்படுத்தலில்உப பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் பல்வேறு நகைகொள்ளையுடன் தொடர்புடைய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post