அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் - எட்டு மில்லியனை கடந்தது பாதிப்பு - Yarl Voice அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் - எட்டு மில்லியனை கடந்தது பாதிப்பு - Yarl Voice

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் - எட்டு மில்லியனை கடந்தது பாதிப்பு


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு மில்லியனைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி அமெரிக்காவில் இதுவரை 82இலட்சத்து 88ஆயிரத்து 278பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால்இ அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 23ஆயிரத்து 644பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 71ஆயிரத்து 687பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்இ 928பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 26லட்சத்து 69ஆயிரத்து 233பேர் வைரஸ் தொற்றுக்காகஇ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 15ஆயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை மொத்தமாக 53 இலட்சத்து 95ஆயிரத்து 401பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post