எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமிஇ துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள்இ மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்தனர். குறித்த ஆலோசனை இன்று காலைவரை நீடித்தது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்இ இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஇ கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.
பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்இ அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார். கட்சியின் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Post a Comment