அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் மகன் - Yarl Voice அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் மகன் - Yarl Voice

அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் மகன்


விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தில் அவருக்கு மகனாக நடித்தவர் தற்போது அஜித் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. 

இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் விஜய்யின் மகனாக அதாவது சிறுவயது விஜய்யாக அக்‌ஷத் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து இருப்பார். இவர் விஜய்யுடன் பல காட்சிகள் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அக்‌ஷத் தான் விரைவில் அஜித்துடன் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். அனேகமாக அவர் 'வலிமை' படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post