இது எனக்கு கடவுள் தந்த வரம்- கொரோனா பாதிப்பு குறித்து டிரம்ப் கருத்து - Yarl Voice இது எனக்கு கடவுள் தந்த வரம்- கொரோனா பாதிப்பு குறித்து டிரம்ப் கருத்து - Yarl Voice

இது எனக்கு கடவுள் தந்த வரம்- கொரோனா பாதிப்பு குறித்து டிரம்ப் கருத்து


தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரம் என்றும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில்இ டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்இ 'எனக்கு கொரோனா வந்தது கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுகொடுத்திருக்கிறது' என கூறி உள்ளார்.
 
மேலும்இ சீனாவால் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post