யாழ் நகர வியாபாரிகள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டம் - Yarl Voice யாழ் நகர வியாபாரிகள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டம் - Yarl Voice

யாழ் நகர வியாபாரிகள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது குடுபங்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு யாழ்.நீதிமன்றத்தின் கட்டளையின் பின் தமக்கு 2010 ஆம் ஆண்டு, யாழ் மாநகர சபையால் கடைகள் வழங்கப்பட்டது எனவும் தற்போது முதல்வர் ஏதோ உள்நோக்கத்தோடு தமது அப்பிள் கடைகளை அப்புறபடுத்த நினைப்பதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
"கௌரவ முதல்வரே வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் நீங்களா எமக்கு உரிமை பற்றி கதைப்பது"
கௌரவ மாநகர சபை உறுப்பினர்களே 45 உறுப்பினர்களும் எமக்காக சபையில் குரல் கொடுங்கள்."
"கௌரவ முதல்வரே போராட்டத்தின் வலிகள் ஆறவில்லை கொவிட் 19 இதற்குல் உங்களின் பழிவாங்களா?"
"கௌரவ முதல்வரே நம்பி வாக்கு போட்டோம் நடுத் தெருவா நம் வாழ்வு?"
"கௌரவே முதல்வரே நாம் இருக்கும் நிலம் CTB பஸ் நிலையத்திற்கு சொந்தமானது உங்களின் அபிவிருத்திக்கு நாம் எப்படி தடை? "
"அப்பிள் வியாபாரம் பஸ் நிலைய கடை தொகுதிகள் அமைந்த பகுதிகளில் தான் நடைபெறும் பன்ணை பகுதிக்கு சென்றால் எமது நிலை?"
"கௌரவ முதல்வரே 134 குடும்பங்களை வீதிக்கு கலைத்துத்தான் உங்களின் அதிகாரத்தை உலகிற்கு காட்டணுமா?" உள்ளிட்ட பல்வேறு  வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post