யாழ்ப்பாண பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு - Yarl Voice யாழ்ப்பாண பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு - Yarl Voice

யாழ்ப்பாண பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு
யாழ்ப்பாண பொலிசாரின் ஏற்பாட்டில் இளைஞர் சேவை மன்றத்தினர் மற்றும் யாழ்ப்பாணம்   சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு  "மீட்டரான வாழ்க்கை"எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் covid 19விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன , யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவில யாழ்ப்பாண பிரிவுஉதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிபிரசாத் பெர்னான்டோ மற்றும் யாழ்ப்பாண பொலீசார்கலந்துகொண்டு யாழ் நகரில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்குகொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஸ்ரிக்கர்கள் பேருந்தில் ஒட்டப்பட்டது 


மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டதோடு சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post