வீட்டுத் திட்டத்துடன் மலசலகூட வசதியையும் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை - Yarl Voice வீட்டுத் திட்டத்துடன் மலசலகூட வசதியையும் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை - Yarl Voice

வீட்டுத் திட்டத்துடன் மலசலகூட வசதியையும் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை
யாழ். வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அராலிப் பகுதியில் மலசலகூட வசதியில்லாத வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அராலி செட்டியார் மடப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கே மலசலகூட வசதியில்லாத வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டத்திற்கான முழுமையான பணம் கிடைக்காததால் வீட்டையும் முழுமையாக கட்ட முடியவில்லை என்றும் தமக்கு மட்டுமல்ல அந்தப் பகுதியில் வீட்டுத்திட்டம் கிடைத்த சில பேருக்கும் இதே நிலைமை என அந்தக் குடும்பம் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை எடுத்து வீட்டுத்திட்டத்தை முழுமையாக்க ஆவண செய்யுமாறு கேட்டு நிற்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post