தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி சமகால அரசயல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன.
இதன் போது கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களில் மேற்படி கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதெனவும் பங்காளிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
யாழிலுள்ள தமிழரசுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் உட்பட கட்சிகளின் பிரதிநிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment