கொரோனா பாதிப்பு தொடர்பில் மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice கொரோனா பாதிப்பு தொடர்பில் மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

கொரோனா பாதிப்பு தொடர்பில் மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை


இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று சனிக்கிழமை காலை அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டிருக்கும் அவர்இ கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களாக இருந்தால் உயிரிழப்புக்கள் நேரிடுவது சாத்தியமாகாது என்கிற போதிலும் வயோதிபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் உயிரிழப்புக்கள் பதிவாகலாம் என்று குறிப்பிட்டார்.

'கடந்த காலங்களில் கந்தக்காடு மற்றும் வெளிசற கடற்படை முகாமில் தொற்று ஏற்பட்ட அநேகர் இளைஞர்கள் அல்லது வயோதிப வயதெல்லையை அண்மிக்கின்றவர்களாக இருந்த படியினால் தொற்று குணமடைந்தது. உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் வயோதிபர்களுக்கு இந்த தொற்று தீவிரமாகப் பரவினால் உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post