யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் தப்பியோட்டம் - மடக்கி பிடித்த மக்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை - Yarl Voice யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் தப்பியோட்டம் - மடக்கி பிடித்த மக்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை - Yarl Voice

யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் தப்பியோட்டம் - மடக்கி பிடித்த மக்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.இதனால் தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினரும் பொலிசாரும் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தென்னிலங்கையை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருநதது.அத்துடன் திடீர் சுகயீனம் காரணமாக மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் ஒருவர் இன்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்றதாகவும் அப்பகுதி மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.


எனினும் தப்பி ஓடிய நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள் அவர்களுடன் தொடர்பினை பெநியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post