கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு (படங்கள்) - Yarl Voice கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு (படங்கள்) - Yarl Voice

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு (படங்கள்)
யாழ்ப்பாணம் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தாக்கம் தொடர்ந்து அதிகரித்ததால் யாழ் கோப்பாய் ஆசிரியர் கல்லலூரி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த்து.

இவ்வாறு கோப்பாய் Covid-19  சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னர்.

Covid-19 தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின்  சம்மதத்துடன்  ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த  வேப்பமரகன்று வழங்கி வைக்கப்பட்டது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post