புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் ஜோண் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் சாதனை - Yarl Voice புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் ஜோண் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் சாதனை - Yarl Voice

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் ஜோண் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் சாதனை
யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

புதித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை 228 மாணவர்கள் பரிச்சைக்கு தோற்றியுள்ளனர். 

குறித்த மாணவர்களில் 159 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் கடந்த கால சித்திகளுடன் ஒப்பிடும் போது வரலாற்றில் அதி உயர் சித்தியாக 70 வீதம் பதிவாகியுள்ளது.

குறிப்பாக நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் பொறியியளாளர்களான அஞ்ஜிதன் , குமுதினி ஆகியோரின் மகளான அஞ்ஜிதன் அஜினி எனும் மாணவி 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post