5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை - Yarl Voice 5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை - Yarl Voice

5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை


இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 11 ஆயிரத்து 713 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24ஆயிரத்து 448 ஆக உள்ளது.

நாட்டில் அதிகளவில் அதாவது கடந்த சனிக்கிழமை 11 ஆயிரத்து 999 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையை ஒரு நாளில் நடத்தப்பட்ட அதிகூடிய பரிசோதனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post