இலங்கையில் இனி 55 வயதுக்கு பின் தேர்தலில் போட்டியிட முடியாது? - Yarl Voice இலங்கையில் இனி 55 வயதுக்கு பின் தேர்தலில் போட்டியிட முடியாது? - Yarl Voice

இலங்கையில் இனி 55 வயதுக்கு பின் தேர்தலில் போட்டியிட முடியாது?


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஏனைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை உகவங்கப்படலாம் என்று அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில்இ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதிபெறும் குறைந்த வயதெல்லையாக இருந்த 30 வயதுஇ 36ஆக மாற்றப்பட்டது.

இருப்பினும் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த வயதெல்லையை மீண்டும் 30ஆக மாற்றினார்.

எனினும் தற்போதைய அரசியலைமப்பில் அதிகூடிய வயதெல்லை என்று குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்று அரசாங்கம் கருத்து வெளியிட்டு வருகிறது.

இதில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் அதிகூடிய வயதெல்லையை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த யோசனைக்கு அரச உயர்பீடமும் இணங்கியுள்ளது என்றும் நம்பகரமாக தெரியவருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post