காரைநகர் கொரோனா நோயாளியுடன் தொடர்புடையவர்களை தேடி சுகாதாரத் துறையினர் வலைவீச்சு - Yarl Voice காரைநகர் கொரோனா நோயாளியுடன் தொடர்புடையவர்களை தேடி சுகாதாரத் துறையினர் வலைவீச்சு - Yarl Voice

காரைநகர் கொரோனா நோயாளியுடன் தொடர்புடையவர்களை தேடி சுகாதாரத் துறையினர் வலைவீச்சு
"காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை. கோரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

காரைநகரில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிவரை 36 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

"காரைநகர் பிரதேசத்தில் கோரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதேச சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் கோரோனா தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

சுகாதாரத் துறையினரின் கள நிலமைகளை ஆராய்ந்து இன்று மாலை அடுத்த கட்ட நவடிக்கை எடுக்கப்படும்" என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post