கொரோனா அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்து - Yarl Voice கொரோனா அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்து - Yarl Voice

கொரோனா அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகடலுணவுகளால் கொரோனா பரவுவதாக பொய்யான வதந்திகளைப் பரப்பியர்வகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் க.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..

வட பகுதி மீனவர்கள் பல்வெறு பாதிப்புக்களை தொடர்ந்தும் எதிர் நோக்கி வருகின்றனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிக இக்கட்டான நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். 

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக நாம் கோரி வருகின்றொம்.
இவ்வாறான நிலைமையில் புதிது புதிதாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் மீனவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று விடயத்திலும் மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக மீனவர்களுடாக கொரோன பரவுகிறது என்று யாரோ பரப்பிய வதந்தியால் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு கடலுணவுகளினூடாக பரவுதாகவும் யாரோ பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுக்களால் அச்சத்துடன் மிக வேதனையான நிலைமையில் மினவர்கள் உள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் மீனவர்களூக கொரோன வரவும் இல்லை. அவ்வாறு பரவவும் இல்லை. இலங்கையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அது பல இடங்களுக்கும் பரவியிருந்த நிலையில் சிலரால் தற்போது பொய்யான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இத்தகைய பொய்யான வாந்திகளைப் பரப்பியவர்கள் இணங்கண்டு அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வடக்கு கடற்தொழிலாளர்கள் சார்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post