தீபாவளி தினத்தில் ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடதீர்கள் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு! - Yarl Voice தீபாவளி தினத்தில் ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடதீர்கள் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு! - Yarl Voice

தீபாவளி தினத்தில் ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடதீர்கள் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!தீபாவளி தினமாகிய நாளைய தினம் மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


 இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும்  இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5  பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 


எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார் .

குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் ஆலயங்களுக்கு  சென்று ஒன்றுகூடுவதை தவிர்த்து வீடுகளிலிருந்து அமைதியான முறையில் இவ்வருட  தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post