யாழ் சிற்றி லயன்ஸ் மற்றும் நகர லியோக் கழகத்தின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் - Yarl Voice யாழ் சிற்றி லயன்ஸ் மற்றும் நகர லியோக் கழகத்தின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் - Yarl Voice

யாழ் சிற்றி லயன்ஸ் மற்றும் நகர லியோக் கழகத்தின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


 யாழ்ப்பாணம் நகர லியோக் கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் பொலிஸாரின் ஆதரவுடன் கொரோனா விழிப்புணர்வுப் பிரசாரம் யாழ் திருநெல்வேலியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ் நகர லியோ கழகத்தின் தலைவர் லியோ ஜனுசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு லியோ கழக அங்கத்தவர்கள், யாழ்ப்பாணம் நகர லயன்ஸ் கழகத்தின் அங்கத்தவர்கள், லயன்ஸ் கழகங்களின் மாவட்ட பிரதிப் பொருளாளர் லயன் Dr.பாலகுமார், ஆளுனரின் ஆலோசகர் லயன் றஜீவன், வலயத் தலைவர்கள் லயன் லெனின்குமார், லயன் சத்தியவான், 

ஆளுநர் சபை உத்தியோகஸ்தர்கள் லயன் தினேஷ்குமார், லயன் ஐங்கரன் (சிற்றி லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர்), சிற்றி லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரணவச்செல்வன், பொருளாளர் லயன் றொனி கஜன், கழக உறுப்பினர்கள், 

கோப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், கோப்பாய் பிரதேச கிராம சேவை அலுவலர் திரு.தயாரூபன் எனப் பலரும் கலந்து கொண்டு இந்த கொரோனா விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

மேற்படி விழிப்புணர்வு நிகழ்வுக்கு அனுசரணையை நீர்கொழும்பு ஒறியன்ட் லயன்ஸ் கழகம் மற்றும் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் ஆளுநரின் விசேட ஆலோசகர் லயன் பிளசீடஸ் பீற்றர் மற்றும் யாழ் நகர லியோ கழகம், யாழ் நகர லயன்ஸ் கழகம் என்பன வழங்கி வைத்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post