வடக்கு மாகாண கொரோனா செயலணியின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்கள் - Yarl Voice வடக்கு மாகாண கொரோனா செயலணியின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்கள் - Yarl Voice

வடக்கு மாகாண கொரோனா செயலணியின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்கள்





தற்போதுள்ள Covid 19 தொற்று நிலைமையினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கிராம மட்ட குழு அதே போல பிரதேச மட்ட குழுக்களை வினை திறனாக செயற்படுத்துவதாக   இன்றைய வடக்கு மாகாண covid19 செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

வடமாகாண கொரோனா செயலணி கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

வடக்கு மாகாணcovid19 செயலணி கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண cocid19 பற்றி ஆராயப்பட்டதோடு மாவட்ட நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டது . 

அத்துடன் அத்தியாவசிய உணவு பொருட்களின் இருப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான போக்குவரத்து விநியோகம் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் நிலவரங்கள் அதேபோன்று எதிர்வரும் மழைகாலத்தில் மாவட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது 

அதேபோன்று விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் போது உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது இந்த வகையிலே யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும்  இன்றைய நிலையில் 800 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள் தற்பொழுது  யாழ் மாவட்டத்தில்  கொரோனா தோற்றால் பாதித்தோர் 16 ஆக உயர்ந்திருக்கிறது 

இந்த நிலையில் மிகவும் விழிப்பாக  covid  19தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக எடுக்க வேண்டிய காலகட்டமாகவுள்ளது. அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வர்த்தமானி அறிவித்தல்களை சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

 அதேபோல தற்பொழுது விழிப்புணர்வுகளை பலதரப்பட்ட மட்டங்களிலும் எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு குழுவாக அதாவது வியாபாரிகளுக்கு தனியாக மற்றும் அங்காடி வர்த்தகர்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுடன் ஈடுபாடு கொண்டவர்கள்  தமது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதை இலக்கு வைத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ஏனென்றால் விழிப்புணர்வு நடவடிக்கைகள்  மேற்கொண்டாலும்அதனைப் பின்பற்றுவது மிகவும் குறைவாக காணப்படுகின்றது . எனவே ஒவ்வொரு குழுவாக  செயற்படுத்துவதன் மூலம் அதனை மக்கள் மத்தியில் தெளிவடைய வைக்க முடியும் அதே போல் மாணவர்கள் ஊடாக அல்லது பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஊடாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஆராயப்பட்டது 

Covid 19 நிலைமையை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே கிராம மட்ட குழு அதே போன்று பிரதேச மட்ட குழு மாவட்ட மட்டகுழுக்களை அமைத்திருக்கின்றோம் அதனுடைய செயற்பாடுகளை துரிதப்படுத்தி அவற்றை வினைத்திறனாக செயல்படுத்தும்படி இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது 

அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையும் அந்த குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  இந்த குழு சுகாதார வழிகாட்டலினை கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டுமெனகோரப்பட்டுள்ளது

தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒன்று கூடுவதாகவிருந்தால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது 

பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் போன்றவற்றில் அவர்களுடைய வாகன இலக்கத்தினை வாகனத்தில் உட்புறத்தில் காட்சி படுத்தி அதனை மக்கள் புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வாடகை வாகன சாரதிகள் தாங்கள்  பயணிகளை ஏற்றிச்சென்ற விவரங்களை தாங்கள் பெற்று வைத்திருத்தல் அவசியமானது 

அதேபோல உணவகங்களில்எடுத்துச் சென்று உண்ணுதல் செயற்பாடு தொடர்பில் சுகாதார நடைமுறை சட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தொற்று 16 ஆக உயர்வடைந்துள்ளது 

 யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ராஜ கிராமம் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் குரு நகர் திருநகர் பகுதிகள் காணப்படுகின்றன

 புங்குடுதீவு ஏற்கனவே முடக்கப்பட்டு தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது   சுமார் 800 குடும்பங்கள் அளவில் தற்பொழுது சுய தனிமைப்படுத்தி யுள்ளோம் இந்த நடவடிக்கைகளை சுகாதாரப் பகுதியினர் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார்கள் 


மேலும் இடர் கால நிவாரணமாக இரண்டு வாரங்களுக்கான நிவாரண உணவு பொதிகள் வழங்குவதற்கு அரச நிதியிலிருந்து முதற்கட்டமாக 7 மில்லியன் ரூபாய் கிடைத்திருக்கின்றது அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றிலிருந்து  எடுத்துள்ளோம் அந்த வகையிலே பிரதேச செயலர்கள் அந்த விவரங்களை திரட்டி அதனை   வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

அதனைவிட மாவட்ட செயலகத்தில் தகவல் தொடர்பு மையம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம் இங்கு முப்படை சார்ந்தவர்களும் அனர்த்த முகாமைத்துவ குழுவினரும் இணைந்த வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அவர்களுடைய தொடர்பு இலக்கங்கள் 0212117117 இந்த இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய குவித்தது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடியும்

வெளிமாவட்டங்களுக்கான பயணங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனினும்  மக்கள் வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இயல்பு நிலை காணப்படுகின்றது சற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனினும் மேல் மாகாணத்தை பொறுத்தவரையில்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

 ஆனால் வடமாகாணத்திற்குள்ளே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது எனினும் அத்தியாவசிய பொருட் போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறுகின்றன இருந்தபோதிலும் மேல்  மாகாணத்திற்கான போக்குவரத்தில் ஏதாவது தடங்கல் ஏற்படுமானால் அதனை நிவர்த்தி செய்வதற்குரிய  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது  

மேலும்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் தங்களுக்குரிய பொறுப்பினை உணர்ந்து அனுசரித்து செயற்படுவதன் மூலம் எமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக  தொற்று இல்லாத நிலைமையினைபாதுகாக்கலாம் எனவும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post